1. ராஜி: மாலாக்கா, எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிருக்காருக்கா. வர நாலு நாள் ஆகும். மாலா: அப்படியா ராஜி! ராஜி: அவர் வர்ற வரைக்கும் துணைக்கு ராத்திரிக்கு என்னோட வந்து படுங்கக்கா. தனியா படுக்க பயமாயிருக்கு. மாலா: சரியாப் போச்சு. உனக்கும், உன் புருஷனுக்கும் இதே வேலைதான். நீ ஊருக்குப் போனாலும் சரி, அவர் போனாலும் சரி.. என்னைத் தான் துணைக்குப் படுக்கக் கூப்பிடுறீங்க….! ராஜி: ????????????????????
2.
அவன் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து வீடு எடுத்துத் தங்கி வேலை பார்த்து வருபவன். அவனைப் பார்க்க ஊரிலிருந்து முக்கியமான சொந்தக்காரப் பெரியவர் வந்திருந்தார். இளைஞன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த அவர் அங்கு ஒரு இளம் பெண் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல். பெரியவர்: இது யாருப்பா…? இளைஞன்: என்னோட ரூம் மேட் தாத்தா பெரியவர்: அப்படீன்னா? இளைஞன்: என்னுடன் அறையை பங்கிட்டுக் கொள்பவர் என்று அர்த்தம் தாத்தா. அறையை மட்டும்தான்.. படுக்கை வேறு வேறுதான்.! பெரியவர்: ஓஹோ.. சரி. சரி. பெரியவர் ஊருக்குப் போய் விட்டார். அவர் போனதும் அந்தப் பெண் அவனிடம் வந்து, கிச்சன்ல இருந்த தோசைக் கரண்டியைக் காணோம். உங்க தாத்தா வந்து போன பிறகுதான் அது காணவில்லை என்றாள். அதைக் கேட்ட இளைஞனுக்கு தர்மசங்கடம். தாத்தாவுக்குப் போனைப் போட்டான். இளைஞன்: தாத்தா நீங்க வந்த பிறகு தோசைக் கரண்டியைக் காணோம். தப்பா நினைக்காதீங்க. நீங்க எடுத்திட்டுப் போய்ட்டீங்களா…? பெரியவர்: அந்தப் பெண் “அவளது” படுக்கையில் படுத்துத் தூங்கியிருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.. ஏன்னா…. நான் அதை அவளோட படுக்கைக்குக் கீழதான் வச்சிட்டு வந்தேன்! இளைஞன்: ????
3.
3.
கணவனும் மனைவியும் மாதாந்திர பட்ஜெட் குறித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் சில செலவுகள் குறித்து வாக்குவாதம் மூண்டது. கணவன் – நீ மட்டும் ஒழுங்கா பொண்ணா லட்சணமா நடந்துக்கிட்டா சமையல்காரியை நான் நிறுத்தி விடுவேன். மனைவி: அதே மாதிரி நீங்களும் ஆம்பளையா லட்சணமா இருந்தா நானும் தோட்டக்காரனை நிறுத்தி விடுகிறேன்…!